Wednesday, December 19, 2007

என்ன வேண்டும்! எண்ணங்களை சிறை பிடித்தேன்

என்ன வேண்டும் எவை வேண்டும்
எப்பொழுது வேண்டும் எப்படி வேண்டும்
என்னை நானே கேட்டேன்!
எண்ணங்களை சிறை பிடித்தேன்

இல்லாதவை இருக்க கேட்டேன்
குறைந்தவை கூடக் கேட்டேன்
இருப்பவை நிலைக்கக் கேட்டேன்
அறியாதவை அறியக் கேட்டேன்

காணி நிலம் கேட்டான் பாரதி
கோடி ரூபாய் கேட்டேன் நான்!
பேராசை யன்று என்றும்
உழைப்பின் ஊதியமாய் வேண்டும்

என்றும் வனையும் தேகம் வேண்டும்
ஊக்கம் குறையா வேகம் வேண்டும்
முன்னேற்றத்தில் மோகம் வேண்டும்
மேலான வெற்றியில் தாகம் வேண்டும்

கைகள் நிறைய வேலை வேண்டும்
அதைச் செவ்வனே செய்ய சூட்சமம் வேண்டும்
திருந்தச் செய்ய திறமை வேண்டும்
அதில் தேர்வுப் பெற ஆர்வம் வேண்டும்

மூளை நிறைய அறிவு வேண்டும்
கண்களில் நேர்மை வேண்டும்
தாழ்ந்திலன் என்ற கர்வம் வேண்டும்
இருப்பினும் அடிப்படையில் அடக்கம் வேண்டும்

என்றும் அரவணைக்கும் தாய் வேண்டும்
கொஞ்சி சண்டையிட தங்கை வேண்டும்
தாயிடம் நிரப்ப அவள் என்றும் வேண்டும்
நேர்நிலை படுத்த தந்தை வேண்டும்
உள்ளம் பேச தமிழ் வேண்டும்

முடிவு வரைவர துணையாள் வேண்டும்
அன்பை செலுத்தி ஆதரவாய் வேண்டும்
நானும் அவளும் அர்த்தனாதியாக வேண்டும்
ஒன்றன்றி ஒன்றில்லாதல் வேண்டும்

அன்பினால் மக்கள் வேண்டும்
தமிழில் மழலைப் பேசவேண்டும்
பன்மடங்கு உயர்தல் வேண்டும்
கல்வி செல்வத்தோடு நன்மக்களாதல் வேண்டும்

தன்னலமற்ற தானம் செய்திடல் வேண்டும்
கவலை களையும் கைகள் வேண்டும்
இல்லாருக்கு கல்வி கற்ப்பிதல் வேண்டும்
இறையாண்மை என்றென்றும் வேண்டும்

என்றென்றும் தமிழ் இனித்திருதல் வேண்டும்!

1 comment:

a little bit of life in me speaks out said...

hello megavum azhagaga irukirathu
kavithayil thoindha thamizhla....
thamizhil kalandha kavidhaya....
....athai kuripittu solla vendaam....
.azhagai pirithu paarkamal menmayai rasikindren
. ....... .....