பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு!
உன்னிடம் பலது பிடிச்சிருக்கு!
உனது நீட்டிய தலைமுடி பிடிச்சிருக்கு!
அதை அள்ளிக் கோர்த்த விதம் பிடிச்சிருக்கு!
வெறும் நெற்றி பிடிச்சிருக்கு!
பொட்டிட்டாலும் பிடிச்சிருக்கு!
நீண்ட நகங்கள் பிடிச்சிருக்கு!
நகத்தின் கூர்மை பிடிச்சிருக்கு!
சாயப்பூச்ச்ற வெறும் நகம் பிடிச்சிருக்கு!
அதில் பளிச்சிடும் அரைவட்ட நகக்கண் பிடிச்சிருக்கு!
மூக்கின் வளையம் பிடிச்சிருக்கு!
வளையத்தின் கோணல் பிடிச்சிருக்கு!
உன் குறு குறு கண்கள் பிடிச்சிருக்கு!
நீ அணியும் கண்ணாடியும் பிடிச்சிருக்கு!
உன் மேற்கத்திய உடை பிடிச்சிருக்கு!
நம் நாட்டு உடை அணிதலும் பிடிச்சிருக்கு!
கைபேசி பழமையானாலும், அதை
நீ பயன்படுத்தும் வேகம் பிடிச்சிருக்கு!
தவறாய் ஓட்டினாலும், வாகனத்தை
நீ ஓட்டும் விதம் பிடிச்சிருக்கு!
தவறை சுட்டும்போது குழந்தைபோல்
நாக்கை நீட்டி கடிக்கும் அழகு பிடிச்சிருக்கு!
சிறிது ஆணவம் தோன்றினாலும் உன்
கருவண்டு கண்கள் பிடிச்சிருக்கு!
எதிர்பாராமல் சந்தித்த பொது
ஆச்சர்யத்துடன் வெட்கம் கலந்த பார்வை பிடிச்சிருக்கு!
பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு!
உன்னிடம் பலது பிடிச்சிருக்கு!
Saturday, June 21, 2008
Thursday, April 10, 2008
யார் அவள்?
வேகம் என்ன அதில் மோகம் என்ன
இள மாலையில் நான் சென்றேன்...
மௌனம் என்ன குளிர் வெய்யில் என்ன
நெடும் மலைகளில் நான் சென்றேன்...
சிறு சாறல் என்ன மண் வாசம் என்ன
சிறு மழையினில் நான் சென்றேன்...
சாலை என்ன அதில் நிழல்கள் என்ன
கொடும் வெய்யிலில் நான் சென்றேன்...
தூசு என்ன மண் புழுதி என்ன
மண் பாதையில் நான் சென்றேன்...
நேரம் என்ன கழித்த பொழுது என்ன
கொண்ட காதலால் நான் சென்றேன்....
என் வாகனத்தில் காதல் கொண்டேன்...
இள மாலையில் நான் சென்றேன்...
மௌனம் என்ன குளிர் வெய்யில் என்ன
நெடும் மலைகளில் நான் சென்றேன்...
சிறு சாறல் என்ன மண் வாசம் என்ன
சிறு மழையினில் நான் சென்றேன்...
சாலை என்ன அதில் நிழல்கள் என்ன
கொடும் வெய்யிலில் நான் சென்றேன்...
தூசு என்ன மண் புழுதி என்ன
மண் பாதையில் நான் சென்றேன்...
நேரம் என்ன கழித்த பொழுது என்ன
கொண்ட காதலால் நான் சென்றேன்....
என் வாகனத்தில் காதல் கொண்டேன்...
Subscribe to:
Posts (Atom)