Thursday, December 27, 2007

அடைப்பெற்றேன் அன்புச்சிறையில்

முதல் முறை உந்தன்
விழிகளை நான்
கண்டபொது ஒரு சுகம்
முதல் மழை அதில்
நினைகையில் வரும்
குளிரோ அந்த சுகம்
மதியால் புரியாமல் கிடக்கிறேன்
பதிலே கிடைக்காமல் தவிக்கிறேன்!

பழச் சுளைகளை ஒத்த
இதழ்களால் நீ
போடும் முத்த யுத்தம்
அறிவுறை இன்றி வரும்
அந்த தந்தி முத்தம்

சகியே நான்
வேறு என்ன செய்வேன்
சிறு குழவாய்
கிடப்பதையின்றி உந்தன் மடியினில்
விடுதலையே கிடைக்காத
அந்த அன்புச்சிறைதனில்!

Wednesday, December 26, 2007

அழகு பாகம் -1

எது அழகு? எவை அழகு?
நிரந்தரமற்றவை அழகு
அவரவர் கண்ணுக்கு ஒவ்வொன்றழகு
என்கண்களில் சில மாறுபட்ட அழகு!

கடைசியில் மகிழ்ச்சி தரும்
வெற்றிக்கு வித்தான உள்ளிருக்கும்
பயமழகு!

தன்னைதான் நிறுத்தி தலை
நிமிரச்செய்யும்-வந்த தோல்வியின்
அவமானமழகு!

இறக்கமற்று இரக்கம் கண்டு
எள்ளுவோரை ஏறிமிதிக்க -வந்த அவமானத்தின்
கோபமழகு!

அன்பின் அழுகை அழுத்தி
அகத்தில் ஆழ்ந்த அகழா காதலின்
தோல்வியழகு!

இரும்பான நெஞ்சங்கள் உருவாக
கரும்பான சிலர் பேச்சில் ஏமாந்த
வஞ்சங்களழகு!

யோசித்து பார்த்தால் உணரும்
அழியா பாடங்கள் தரும் இந்த
அவலங்களுமழகே!

Wednesday, December 19, 2007

என்ன வேண்டும்! எண்ணங்களை சிறை பிடித்தேன்

என்ன வேண்டும் எவை வேண்டும்
எப்பொழுது வேண்டும் எப்படி வேண்டும்
என்னை நானே கேட்டேன்!
எண்ணங்களை சிறை பிடித்தேன்

இல்லாதவை இருக்க கேட்டேன்
குறைந்தவை கூடக் கேட்டேன்
இருப்பவை நிலைக்கக் கேட்டேன்
அறியாதவை அறியக் கேட்டேன்

காணி நிலம் கேட்டான் பாரதி
கோடி ரூபாய் கேட்டேன் நான்!
பேராசை யன்று என்றும்
உழைப்பின் ஊதியமாய் வேண்டும்

என்றும் வனையும் தேகம் வேண்டும்
ஊக்கம் குறையா வேகம் வேண்டும்
முன்னேற்றத்தில் மோகம் வேண்டும்
மேலான வெற்றியில் தாகம் வேண்டும்

கைகள் நிறைய வேலை வேண்டும்
அதைச் செவ்வனே செய்ய சூட்சமம் வேண்டும்
திருந்தச் செய்ய திறமை வேண்டும்
அதில் தேர்வுப் பெற ஆர்வம் வேண்டும்

மூளை நிறைய அறிவு வேண்டும்
கண்களில் நேர்மை வேண்டும்
தாழ்ந்திலன் என்ற கர்வம் வேண்டும்
இருப்பினும் அடிப்படையில் அடக்கம் வேண்டும்

என்றும் அரவணைக்கும் தாய் வேண்டும்
கொஞ்சி சண்டையிட தங்கை வேண்டும்
தாயிடம் நிரப்ப அவள் என்றும் வேண்டும்
நேர்நிலை படுத்த தந்தை வேண்டும்
உள்ளம் பேச தமிழ் வேண்டும்

முடிவு வரைவர துணையாள் வேண்டும்
அன்பை செலுத்தி ஆதரவாய் வேண்டும்
நானும் அவளும் அர்த்தனாதியாக வேண்டும்
ஒன்றன்றி ஒன்றில்லாதல் வேண்டும்

அன்பினால் மக்கள் வேண்டும்
தமிழில் மழலைப் பேசவேண்டும்
பன்மடங்கு உயர்தல் வேண்டும்
கல்வி செல்வத்தோடு நன்மக்களாதல் வேண்டும்

தன்னலமற்ற தானம் செய்திடல் வேண்டும்
கவலை களையும் கைகள் வேண்டும்
இல்லாருக்கு கல்வி கற்ப்பிதல் வேண்டும்
இறையாண்மை என்றென்றும் வேண்டும்

என்றென்றும் தமிழ் இனித்திருதல் வேண்டும்!

Saturday, December 15, 2007

தனிமை கொடுமை

இளமையில் தனிமை கொடுமை
இளைஞர்கள் பலருக்கு இன்று
இதுவே நிலைமை
இவ்வாழ்கையில் வெறுமை உண்மை
நானும் அவர்க்ளுள் ஒன்று
என்பதோர் உவமை

பெற்றோர் உற்றார் விட்டு
ஊரும் மக்களும் அறியா
வேலை நிமித்தமிட்டு
மட்டற்று, ஊனுறக்கம் கெட்டு
வேறு போக்கற்று சிறையாய்
வாழ்க்கை தறிகெட்டு

நாளும் பொழுதும் ஊமையாய்
நான்கு சுவர்கள் மட்டுமே
இருக்கும் நன்பனாய்
மடியில் கனினியே குழந்தையாய்
வலையில் உரையாடி மகிழ்வோமே
வாழ்க்கை போலியாய்

உற்றோர் கேட்குறல் இல்லை
நன்பர்களுடன் கூட பொழுதில்லை
தொழிலே பிரதானமாய்
தாய்மொழி பேசவாய் பில்லை
அவர் மொழியும் அறியவில்லை
வாயிருந்தும் ஊமையாய்

மனம் தரும் உணவில்லை
கேட்டு பரிமாற தாயில்லை
ஏதோ பசியாற்றி
சின்னஞ்சிறு சண்டையில்லை
தலைசாய்க்க மடியில்லை
எதோ பொழுதோட்டி

என்ன சாபமுற்ற வாழ்க்கை
ஏனிந்த வேண்டா வேட்க்கை
விடு, வருகிறேன்
குடும்பத்தோடு இனையும் வாய்ப்பு
மகிழ்வு மட்டுமே நினைப்பு
வீடு வருகிறேன்!

Thursday, December 06, 2007

சந்தோஷம் உற்சாகம்

ஏன் இந்த சந்தோஷம்!
எப்படி வந்ததிந்த உற்சாகம்
மனதில் சில ஞாபகங்களால்
பூரித்து பொங்குவதை உணர்ந்தேன்
அடடா! மனதால் நினைக்கும் திறன்
அன்றோ? இறைவன் கொடுத்த வரன்

பூக்கள் நினைத்தேன் மகரந்தம்
அவ்வண்டுகள் ரீங்காரம் ஆனந்தம்
வண்ணத்திப் பூச்சிகளின் வண்ணங்கள்
இறைவன் இருக்கிறா ரென்பதற்கான திண்ணங்கள்
பூவாசத்தோடு தோட்டத்தில் நிலவும் அமைதி
வாழ்வில் இதுவன்றோ பேருலகின் நிம்மதி?

கார்முகில் நினைத்தேன் மழைச்சாறல்
குளிரினால் உடலில் சிறு உதறல்
மண்வாசத்தோடு மழையின் கவர்ச்சி
சூடான காப்பி தந்திடும் புத்துணர்ச்சி
பறவைகள் கூட்டம் கூட்டமாய் கூவல்
தமிழில் பாட்டேழுத சின்னதாய் ஆவல்

காலையில் கதிர் சோம்பல் முறித்தெழும்
மீண்டும் தூங்க தேகம் துடிக்கும்
சோம்பேறியென தாய் திட்ட இனிக்கும்
இருப்பினும் மனம் எழ மறுக்கும்
துயில் கலைந்தும் பாயில் கிடக்கும்
சுகத்தை நினைத்தாலே மகிழ்ச்சி பிறக்கும்

பண்டிகை நினைத்தேன், தீபாவெளி
மலைப்பாம்பாய் நீண்ட சரவெடி
புத்தாடைகளில் நடக்கும்மோர் அணிவகுப்பு
சிறுவர்களின் முகமெல்லாம் பூரிப்பு
சிறுவயதில் பெற்றதில் ஆனந்தம்
பெற்றுத்தருவதிலே இப்பொழுது பேரானந்தம்!

மழலை நினைத்தேன், புன்னகை
தொட்டிலே அதன் மாளிகை
அன்னை மடி என்பது நிதர்சணம்
ஆயுளே கடந்தாலும் அஃதோர் க்ஷணம்
குழந்தயாக எண்ணியது உள்ளம்
நாளை என்பதை மறந்த இன்பம்

அலுவல் வேலைகள் நாள்தோரும்
சோர்வுகள் ஒன்றே அது சேர்க்கும்
பலவற்றோடு இதுவும் ஒன்றாக
கண்மூடி அமர்ந்தேன் சிலையாக
களிப்பை தரும் நினைவுகள்
இறைவன் அருளிய லீலைகள்!!

Sunday, November 04, 2007

What a way to start the day
With good news to hear, what you say
My sister is blessed with a baby boy
Both are doing fine, that’s a good sign!
I have become Mama and in my family its hungama!