Thursday, December 06, 2007

சந்தோஷம் உற்சாகம்

ஏன் இந்த சந்தோஷம்!
எப்படி வந்ததிந்த உற்சாகம்
மனதில் சில ஞாபகங்களால்
பூரித்து பொங்குவதை உணர்ந்தேன்
அடடா! மனதால் நினைக்கும் திறன்
அன்றோ? இறைவன் கொடுத்த வரன்

பூக்கள் நினைத்தேன் மகரந்தம்
அவ்வண்டுகள் ரீங்காரம் ஆனந்தம்
வண்ணத்திப் பூச்சிகளின் வண்ணங்கள்
இறைவன் இருக்கிறா ரென்பதற்கான திண்ணங்கள்
பூவாசத்தோடு தோட்டத்தில் நிலவும் அமைதி
வாழ்வில் இதுவன்றோ பேருலகின் நிம்மதி?

கார்முகில் நினைத்தேன் மழைச்சாறல்
குளிரினால் உடலில் சிறு உதறல்
மண்வாசத்தோடு மழையின் கவர்ச்சி
சூடான காப்பி தந்திடும் புத்துணர்ச்சி
பறவைகள் கூட்டம் கூட்டமாய் கூவல்
தமிழில் பாட்டேழுத சின்னதாய் ஆவல்

காலையில் கதிர் சோம்பல் முறித்தெழும்
மீண்டும் தூங்க தேகம் துடிக்கும்
சோம்பேறியென தாய் திட்ட இனிக்கும்
இருப்பினும் மனம் எழ மறுக்கும்
துயில் கலைந்தும் பாயில் கிடக்கும்
சுகத்தை நினைத்தாலே மகிழ்ச்சி பிறக்கும்

பண்டிகை நினைத்தேன், தீபாவெளி
மலைப்பாம்பாய் நீண்ட சரவெடி
புத்தாடைகளில் நடக்கும்மோர் அணிவகுப்பு
சிறுவர்களின் முகமெல்லாம் பூரிப்பு
சிறுவயதில் பெற்றதில் ஆனந்தம்
பெற்றுத்தருவதிலே இப்பொழுது பேரானந்தம்!

மழலை நினைத்தேன், புன்னகை
தொட்டிலே அதன் மாளிகை
அன்னை மடி என்பது நிதர்சணம்
ஆயுளே கடந்தாலும் அஃதோர் க்ஷணம்
குழந்தயாக எண்ணியது உள்ளம்
நாளை என்பதை மறந்த இன்பம்

அலுவல் வேலைகள் நாள்தோரும்
சோர்வுகள் ஒன்றே அது சேர்க்கும்
பலவற்றோடு இதுவும் ஒன்றாக
கண்மூடி அமர்ந்தேன் சிலையாக
களிப்பை தரும் நினைவுகள்
இறைவன் அருளிய லீலைகள்!!

No comments: